சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

கலைவாணி
மண்ணில் மாந்தர் மகிழ்வுடன் வாழ
கண்ணில் வைத்து காத்திடும் தெய்வம்
எண்ணில் அடங்கா உயிர்கள் படைப்பில்
வண்ண உலகில் வாழ்தல் கண்டோம்
இன்பம் துன்னம் இயற்கை தந்நது
அன்பும் பண்பும் ஆண்டவன் அருளே
கல்வி செல்வம் கலைமகள் கொடையே
வல்லவர் ஆகி வாணியை வணங்கி
நல்லதை அடைய நாமும் முயல்வோம்
கல்வியில் சிறந்து காரியம் ஆக்குவோம்
மனதில் பண்பை மகிழ்வுடன் வளர்ப்போம்
தனமும் குவிய தினமும் தொழுவோம்
திருமகள் என்னும் திவ்விய மகளை
வாசல் தேடி வருவாள் கலைமகள்
பூசல் போக்கி புதுவாழ்வு தருவாள்
வாணியைப் போற்றி வாழ்வோம் நாமும்
ஏணியாய் எமையும் ஏற்றிடுவாள்