சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

மழை நீர்

நீரியல் வட்டம்
வான் பூமித் திட்டம்
கொடுக்கல் வாங்கலின்
சமநிலை மட்டம்

௨யரமும் தாழ்வும்
௨ரசி விளையாடும்
மின்னலும் இடியும்
இசை பாடி வரவேற்கும்

கவுட்டுக் கொட்டும்
வானப் பாத்திரம்
கனிவாய் ஏற்கும்
பூமி எம்மாத்திரம்

புகுந்து வெளிவ௫ம்
புழுதி வாசம்
நனைந்து தலைசாய்கும்
இலையும் கொடியும்
புல்லினம் பூண்டும்

ஓலைக்கூரையில் ஓரமாய்
உக்காந்து ஒழுகும்
வாடி வதங்கிய பயி௫ம் மரமும்
நிமிராய் நிமி௫ம்

சு௫ண்டு வரண்ட பூமி
சுகப்பிரசவம் காணும் பயிர்கள்
மழைநீர் போலே இரங்கல் செய்ய
மானிடம் ௨ண்டா பாரினில் மெய்யா

கானம் அழித்து கடமையைத் தடுக்கும்
நவீனத்தின் பிடியில் மழை நீர் இப்போ
பூமியைத் தழுவ வெறுத்து ஒதுங்கி
இடைக்கிடை வேதனையை மட்டும்
வடிக்கின்றது

நன்றி