சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 192
20/09/2022 செவ்வாய்
மாட்சிமை தங்கிய மகாராணி!
——————————————-
சீரிய உம் கிரீடம் எங்கே!
சிறந்த நல் வைரம் எங்கே!
பாரிய விலைகள் கொண்ட
பளபளக்கும் உடைதான் எங்கே!
இளமையில் பொறுப்பெடுத்த
இங்கிலாந்து இராணி உங்கள்
இள மயில் போன்ற தோற்றம்
இன்றுமெம் மனதில் அச்சாய்!
“வின்ஸ்டன் சேர்ச்சில்” முதல்
வியத்தகு பிரதமர் பலரும்
உங்கள் முன் தம் பதவி
உளம் மகிழ்ந்து ஏற்றனரே!
“பொறிஸை”வழியனுப்பி
புது “லிஸ்ஸை”வரவேற்றீர்!
போகிறேன் என ஓர் வார்த்தை
போகும்வரை சொல்ல வில்லை!
பாரெல்லாம் ஆண்டீர்கள்!
பக்குவமாய் கை யாண்டீர்கள்!
ஊரெல்லாம் உம் மறைவால்
உணர்விழந்து போச்சுதம்மா!
ராணி என்ற வார்த்தை இனி
யாருக்கு பொருந்தும் அம்மா!
ஆணி அடித்த பசுமரம் போல்
அசைவின்றி நின்றோம் அம்மா!
நன்றி
மதிமகன்