சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

விடுமுறை

வந்தது அப்பாடா விடுமுறைக் காலம்
தந்து போனதே  மகிழ்ச்சியை நாளும்
புள்ளிமானாகி துள்ளிக் குதித்தோடுதே கோலம்
சொல்லப்போனால் ஆனந்தமே மனதினை ஆளும்

கூண்டிற்குள் அடைபட்ட பறவைக்கு விடுதலை
ஆண்டிற்கு ஒருமுறை அள்ளித்தரும் ஆறுதலை
துக்கங்களை தூக்கியெறிய வந்ததொரு நிகழ்வு
சிக்கல்களை அவிழ்த்துவிடும் விடுமுறையெனும் நிகழ்வு

கொதித்த உடல் உஷ்ணம் தணிந்தது
சிரித்து சந்தோசிக்க உள்ளமும் துணிந்தது
தொலைந்த தூக்கம் மீண்டும் கிடைத்தது
அலைந்த கால்கள் தற்காலிக ஓய்வையடைந்தது

ஜெயம்
22/08/2022