16.08.22
ஆக்கம்-45
விரிசல்
புள்ளி போட்ட பூசல்கள்
அன்று தூரமாய் நின்றது
துள்ளித் துள்ளியே அமெரிக்கா
ஆசியா புகுந்து கிட்ட நுழைந்த
கொள்ளிக்கட்டையால் இன்று
விரிசலானது
ஒன்று இரண்டல்ல பாரினில்
எங்கும் போர்க் கொடி
கொன்று குவிக்கும் உடல்களின்
கோரத் தாண்டவ ஊடுருவல்
துரிதமானது
கள்ளச் சந்தை குள்ள நரித்தனமோ
அள்ள அள்ளக் குறையாத அபாயப்
போதைப் பொருள் பாய் விரிப்பானது
என்னதான் வேண்டும் ஏங்கும் மனிதனுக்கு
சொன்னால்தானே புரியும் சோமாரிகளிற்கு
சீர் வரிசை கொடுக்க சீனா,ரஷ்யா
தயாரில்லையே.