இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடுவாய்!
எழுசீரு விருத்தம் (சீர் வரையறை: காய் காய் காய் காய் காய் காய் மா)
தலங்களிலே செய்கிறாரே தானமது
தந்திடுமா
தரமுயர்ந்த தரணியைத்தான் நன்றாய்
பலமாக இருந்திடுவர் பாரினிலே மக்களும்தான்
பகுத்துண்டு வாழ்ந்தாலே போதும்
நலமான நல்லுலகம் நாளையேதான் பிறக்கணுமே
உலகாளும் ஈரடியில் உண்மையைத்தான் உரைத்தானே
உணர்ந்திடுவோம் உலகமும்தான் உய்யும்!
ஈதலும்தான் தந்திடுமே இன்பமும்தான் உணர்வாயே
இத்தரையில் விலகிடுமே ஏழ்மை
காதலும்தான் கொள்வோமே கட்டியமும் கூறிடுவோம்
கருணையுள்ளம் கொண்டேதான் வாழ்வோம்
பாதகமும் வேண்டாமே பகுத்துண்டு ஓம்பிடுவோம்
பாரினிலே பட்டினியும் நீங்கும்
சாதகமாய் சூழ்நிலைகள் அமைப்போமே சரித்திரமும்
சாற்றிடுமே சந்ததிக்குச் சான்று!
திரு.சக்தி சக்திதாசன் அவர்களே மிகுந்த நன்றி!
திருமதி.வஜிதா முகமட் அவர்களே மிகுந்த நன்றி! இருவரினதும் பணி போற்றுதற்குரியது. வாழ்த்துகள்! தொடர்க உம் பணி!
களம் தந்து உற்சாகமூட்டும்
திரு.நடா மோகன் அவர்களே உங்களுக்கும் மிகுந்த நன்றி! கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!