வாழ்த்துக்கவி…
ஈர்நுாறாய் இலக்கெட்டி
இன்று வாரம் இருநுாறாய்
தொட்டுயரும் வெற்றி வாகை
தொடர்கின்ற கவித்துவமும்
விதையூன்றும் வேர்நிலமே
பாமுகத்து படர்கொடியில்
சந்தம் சிந்தும் சரிதமே
பெற்றுயரும் பேறுகளில்
பெருமிதத்துச் சான்றுகளில்
வடம்பற்றி வரிதொடுத்து
வாழ்த்துரைத்து நயம்பிழிந்து
தொடர்பணியில் துல்லியமாய்
களம்பற்றும் காவியமாய்
நீண்டுயர்க நீடுயர்க
பாமுகத்து வனப்பிலே
பாவை அண்ணா தொடுப்பிலே
பலராக்கும் வாழ்த்திலே
புனைகவியே புத்தொளியே
வாழிய நீ பல்லாண்டு
வளர்முகமாய் நீ நீண்டு!
நன்றி மிக்கநன்றி
200வது வாரத்தின் உயர்வு
இணைவுடன் பாமுக அதிபர் அவர்கட்கும் பாவைஅண்ணா தனித்துவ தட்டிக்கொடுப்பில்
சந்தம் சிந்தும் கவி மிடுக்குடன்
வெற்றித் தொடுகையில் வீறுகொள்ளும் வேளை
“துலங்கட்டும் தூரிகைகள்”
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி