தாய் அழுகிறாள்
———————-
தாமரை அழகில்
தாரை வார்த்தோம் நாட்டை
தாய் அழுகிறாள்
தாரம் கண்கலங்கி நிற்க
தாய் மகளோ தவிக்கிறாள்
தாகத்தில் மக்கள்
தாருங்கள் விடை கூறுங்கள்
தரம்கெட்ட நிர்வாகமே
கடன் கடனுக்கு மேல் கடன்
கடனை திருபிச் செலுத்த வழியேது
கண்கெட்ட பிறகேன் சூரிய வழிபாடு
காலன் கழுத்தில் தாய்நாடு
காத்திருந்து காத்திருந்து நாளும்
கடனே மீண்டும் மீண்டும்
கைகள் கயிற்றால் கட்டிய நிலையில்
கையேந்தும் மக்களாய் நாம் இன்று
ஏர்முனையில் உழுதுண்ட மக்களை
போர்ப் பொறியில் ஒடுக்கினீர்
மார்பறுத்த மிருகங்களிடம்
மார்தட்டிக் கேட்கிறோம்
மாற்றுவழி தாருங்கள்
மறுமுறை கடனா இல்லை களியாட்டமா
மறுக்கும் உலக அரங்கில்
மாற்று அரசுதேடி மக்கள் அறை கூவல்
மந்திகள் காதில் எட்டவில்லையோ!!!
.