வியாழன் கவி
ஆக்கம் 93
பசி
வெற்றிட வயிற்றில்
வெறுமையின் உணர்வு
அற்றதை நினைத்து
ஆதங்க தவிப்பு
பெற்றவன் பொறுப்பு
பேதலித்த மதியில்
சிற்றுயிர் வயிற்றின்
சிரத்தையில் தவிப்பு
சூழ்நிலை அழுத்தம்
சுய நிலை மறந்து
வேதனையின் தீர்வாக
விளைந்ததோர் சம்பவம்
ஆயிரம் நியாயங்கள்
ஆங்காங்கே குதர்க்கங்கள்
அவன் அவன் மட்டும் உணர்வான்
பசி என்னும் உணர்வை
க.குமரன்
யேர்மனி