வாரம் 183
“பறவைகளின் போதனை”
வண்ண வண்ணப் பறவைகள் யாம்
வானில் உயரப் பறக்கின்றோம்
வாழ்வில் உயர்ந்து நிற்கின்றோம்
தீமைகள் வாழ்வில் புரிந்தறியோம்
தினமும் உணவு தேடி அலைந்திடுவோம்
கூடுகட்டி வாழ்ந்தாலும் குறைகளின்றி வாழ்கின்றோம்
ஆறறிவு பெற்ற மனிதன் நீ ஆசா பாசங்களில் அலைகின்றாய்
தாழ்ந்த வாழ்க்கை வாழுகின்றாய் தரையில் கிடந்து உழல்கின்றாய்
நல்லவை தீயவை பேதங்காண மறுக்கின்றாய்
இன மத மொழியென இறுமாந்து திரிகின்றாய்
எமக்கோ எம்மவர் யாவரும் ஓரினம்,பறவையினம்
மனிதா இனத்தால் ஒன்றுபடு
என்றும் உயர்வாய் வாழ்ந்திடலாம்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.