பூமிப்பந்தில் நானும்
பூமிப்பந்தில் சுழலும் வாழ்வு
புடம் போடும் சுதந்திர வாழ்வு
கருணை கொண்ட மானிடப்பிறப்பு
கடவுள் தந்த மனிதப்பிறப்பு
என்னைச் சுமக்கும் எழில் அழகே!
இன்பம் தரும் இதயத்து பூவெளியே!
சுழலும் உந்தன் இயக்கும்
சுடராய் என்னை வளர்க்கிறதே!
பிறந்த நாள் முதல் உலாவும் உன் மண்ணில்
ஓட்டமும் நடையும் ஒன்றாக வளர்த்து
தேட்டத்தை உனக்குள்ளே தேடி
நாட்டமாய் வளர்ந்த நல்வாழ்வு
கடலென்றும் நதியென்றும் எம்முள்
இயற்கையைக் காட்டியே பசுந்தளிராய்
பச்சைப் பயிர்களும் இச்சை மரங்களும்
இன்பத்தை தந்து செல்கிறதே!
பூமிப்பந்தே சுழலும் உன் பணியே
சுடராய்க் எம்மை இயங்கவைக்கிறதே
சுதந்திர இயற்கையைக் காப்போம்
சுகமாய் பூமிப்பந்தில் வாழ்வோம்.
நகுலா சிவநாதன் 1680