சந்தம் சிந்தும் கவிதை

திருமதி . அபிராமி கவிதாசன்.

12.07.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -118
தலைப்பு !
“ கோடை கொண்டாட்டம் “

கோடை விடுமுறை கொஞ்சுகின்ற மலர்களே
ஓடை நீரின்றி ஒளிந்தாடும் கெண்டைகளே

பள்ளி விடுமுறையாம் பட்டாம் பூச்சிகளே
துள்ளிகுதித் தோடி தூரப் பறப்போமே

பழச்சோலை நாடிச்செல்லும் பறவை இனக்கூட்டமே
பழகிய நட்புடனே படையெடுத்து ஓட்டமே

கொஞ்சி மொழிபேசி கொத்தி இறைதேடி
வஞ்சம் அறியாது வாழ்வு சென்றிடுமே

எண்ணமெல்லாம் ஆசைகொண்டு ஏங்கிடுவர் நட்புகண்டு
திண்ணமாக வாதிடுவர் திரும்பிடுவோம் நன்றேஎன்று

கூடிவாழும் கூட்டைவிட்டு குழாவிடுவர் நட்புவட்டம்
தேடிஓடி தெருவோரம் தெம்மாங்கு பாடிடுவர்

கோடை விடுமுறை கொண்டாட்ட குதுகலமே
மேடையின்றி ஆடிப்பாடி மெருகேற்றி மகிழுவரே!

மிக்க நன்றி பாவை அண்ணா 🙏
அதிபர் அவர்களுக்கும் நன்றி 🙏