கவி 611
மெய்யானது பொய்யானது
நேற்றிருந்தோர் இன்று இல்லை இன்றிருப்போர் நாளையில்லை
என்றநிலை கொண்டதிந்த பூமியெல்லை பொய்வாழ்வின் புலம்பல் நிலை
தோன்றுவதெல்லாம் மறைவதற்காகவே
பூப்பது ஒருநாள் வாடுவதற்காகவே
ஆட்டமாடும் தேகம் வேகும்
ஒருபிடி சாம்பலாகும்
உண்டு உடுத்தி சுழன்றடித்து
மாயவலைக்குள் அகப்பட்டு
மண்ணென்றும் பொன்னுன்றும் ஆசைக்குள் கட்டுண்டு
புலன்களை அடக்காது ஆடுமிந்த சரீரம்
கெட்டுத்தான் விழுமட்டும் ஓடும்
பட்டுச் சரியுமட்டும் ஆடும்
என்னவெனச் சொல்லுவது காலனுக்கும் அஞ்சாது
வளமைமாறி இளமைவிட்டு முதுமைதொட்டு
இருண்ட விழிகளுடன் நரைதிரைத் தோற்றம்
செவிப்புலன் குன்றி கூனிய முதுகுடன் மூன்றுகால்களில் நகர்வு
காயமது மாயம் தேனானது வீணானது
படைப்பு அழியும் நீர்க்குமிழி உடையும்
மெய்யென்பது பொய்யாகும்
ஆவிவிட்டு உடல் உணர்வின்றிக் கிடக்கும்.
ஜெயம்