வியாழன் கவி 1650!
இன்னும் என்ன வேண்டும்!
உள்ளங்கைக்குள் உலகின் சுருக்கம்
உறங்கும் வரையில் உயிர்ப்பின் நெருக்கம்
உறவாட உணர்வோடு பகிரப் பழக
உன்னை நீயும் என்னை நானும்
உலகின் முடுக்கெல்லாம்
உணர்த்த் வழிகளும்!!
திறனை வளர்த்து சிறப்பை நிலை நிறுத்த
அறத்தின் வழியில் அன்பை அரவணைப்பைக் கூட்ட
உழைக்க பிழைக்க உரமாய் நிலைக்க
யாவும் நமக்காய் வாழ்வின் பரிசளிப்பு!!
போதும் என்ற போக்கை நிறுத்தி
பொறுப்பாய் கடமை யாவும் ஆற்றி
பிறக்கும் நாள்கள் சிறப்பாய் ஆக்க
இன்னும் என்ன வேண்டும் நமக்கு!
சிவதர்சனி இராகவன்
29/6/2022