வியாழன் கவி
ஆக்கம் 92
மறுப்புக்கள் மன்னிக்கப்படலாமா ?
அனுபவப் பகிர்வின்
அனுசரனையில்
விளைவது
அறிவுரை
அதிகபிரசங்கிதனம்
என அதை
நினைப்பது
ஆணவத்தின் மடமை
அதனாலே விளைவுகள்
எதிர் பார
விபத்துகள்
விழிப்புகள்
இன்றிய
விளைவுகளின்
சந்திப்பு
அனுபவத்தை
புகட்டும்
தண்டனைகள்
அதனாலேயே கிடைக்கும்
அனுபவங்கள
இனியும் என்ன
மறுப்புக்கள் மன்னிக்கப்படலாமே!
க.குமரன்
யேர்மனி