சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
பிரிவுத்துயர்!
காற்று வீசும் திசைகளெல்லாம்
தமிழின் பெருமை மணம் வீச
ஊற்றாக நதியாக கடலாகிய
போற்றுதலுக்குரிய பெருமங்ககையே!
பெண்ணியம் பற்றி
மண்ணிலே முழங்கி
கவிகளும் கதைகளும் காவக்
குவிந்த பாராட்டுகளில் திளைத்து
பவித்திரமாய் பலமேடைகளில்
பேசிய நீவிர்
விதிவிட்ட கோட்டுவழி
விடுதலையாகிப் போனீரோ?
வள்ளுவன் உரைத்த
குறள்வழி புகழொடு தோன்றி மறைந்தீரோ? பள்ளிகள் எல்லாம்
பைந்தமிழ் வளர்த்தீர்
பிள்ளைகள் போலே மாணவச் செல்வங்களை
பாசமுடன் அரவணைத்தீர்
தாகம் கொண்டார் சைவமும் தமிழும் வளர்க்க
பாகம் ஆனீர் பாமுகப் பந்தலில்
வாயார வாழ்த்திடுவீர்
தாயாக வாழ்ந்திட்டீர்
கன்னல் சுவையொடு பேசி
பின்னிப்பிணைந்து நீவிர்
முகம் தெரியா உறவாகி
அகம் நிறைந்து வாழ்கிறீர்!
நித்தமும் ஒலிக்கும் குரல் நினைவலைகளில்
நீண்டு கொண்டே இருக்கும்!
ஓம் சாந்தி!
நன்றி வணக்கம்!