சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

பிரிவுத்துயர்
கோசையா ஆசிரியரே!
பிரிவின் வலி
பிரியாத ரணத்தை
பதிவாக்கி ஆற்றுகின்றோம்!

மலர்ந்த புன்னகை
மனம்நிறை தைரியம்
கனத்த ஆழுமை
கணீர்க் குரலொலி
கலைந்து மறைந்து
கனவாய்ப் போனதேனோ?

பெண்ணியம் பேசிய
பெருமைகொள் படைப்பாளி
திண்ணிய நெஞ்சினைத்
தினவெடுத்த நோயாகி
திசைமாற்றியது கொடுமை!

அன்றிலின் நினைவு
அலைக்கழித்தத்தால்
அவதியாய்ப் போனீர்களோ ?
நெஞ்சு கனக்கிறதே
நேசப் பூக்கள். தவிக்கிறதே!

ஆசிரியமே ஆராதனையாய்
அனுதினம் ஓடியே
ஆக்கிய இளவல்கள்
அழுது துடித்தாலும்
ஆளத்தடம் பதித்து
முரசறைவர் உம்நாமம்!

விதைத்திட்ட இலக்கியங்கள்
விழுதாகிப் பெயர்பொறிக்கும்
இணையோடு ஒன்றித்து
இவ்வுலகைப் பார்த்திருப்பீர்!

கீத்தா பரமானந்தன்27-06 2022