மீளெழும் காலம்….
வரட்சி நீக்கிடும் மழை நீரே
பாறை பிளந்த விவசாயி
பாரின் பசி போக்கிய உபகாரி
நானில வாழ்வில் மழை நீரே
நாற்திசை வளத்தின் செழிப்போடு
நற்பயிர் வளரும் வனப்போடு
மீளெழும் நாட்டின் பெரும்பேறு
தாயக வாழ்வின் தளர்ச்சியில்
தள்ளாடும் உறவுகள் மீட்சியில்
அமைதியின் உறக்கம் திண்டாடும்
அவரவர் மனதில் போராட்டம்
அகலுமா அவலத்தின் பிடிமானம்
மீளுமா மறுபடி மிடுக்கோடு
எத்தனை அளவீடு எமக்குள்ளே
ஏற்றத்தின் இறக்கத்தின் கணக்கிலே
பார்த்தவை விலகும் பரஸ்பரமாய்
பாதைகள் திறக்கும் தினம்தினமாய்
செதுக்கிடும் வயலில் செழிப்பு விதை
செம்மைக்கு உரமாய் மொழியை வளர்
செழிக்கும் உறவே தனித்தோப்பு
சிறக்கும் வாழ்வின் பெரும்காப்பு
நாளைய தலைமுறை நல்நாற்று
மீளெழும் வாழ்வே முன்னேற்றம்
மிளிர்ந்திட உழைப்பதே நம்நாற்று.
நன்றி