வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.06.22
ஆக்கம்-232
மீளெழும் காலம்
அந்த மண் சுகந்தருமா அல்லது
இந்த மண் மகிழ்வுடன் பகிர்ந்திடுமா
அகதி அந்தஸ்து கோரியவர் மனம்
படும்பாடு திண்டாட்டம்

போராட்ட வாழ்வு முடிவில்லாத ஆராய்வு
செவ்வாய்க் கிரகத்தில் கூட வாழ்ந்திடலாம்
எம் மண்ணில் எப்போதும் விடை கிடைக்காதாம்

உணவுப் பசி துரத்த உயிர்ப்பலி குடிக்க
பயிர்கள் நாசமிட மானிடர் குமுறலிட
அலைந்து உருக்குலைந்து எல்லாம் தொலைந்திட

மழையில் நனைந்த மண் வீடாய் கலையும் காலமே
மீண்டும் எப்போது திரும்பும் மீளெழும் காலமாய்