வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.06.22
ஆக்கம்.229
அன்றிட்ட தீ
தமிழன் என்று சொன்னதனாலே
உயிர் எடுத்திடும் அரக்கர் கூட்டம்
எம்மின சான்றும் இருந்த இடம்
இல்லாது அழித்தொழித்தனரே

போக்கிரிகள் சேர்ந்து யாழ் நூலகம்,
ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம்,
பொது சந்தை போன்றன சேதமாக்கி
எரித்தனரே

தொண்ணூற்றேழாயிரம் நூல்கள்
சாம்பலாக்கிய வடு தமிழன் மனதில்
மறையாத காயம் என்றென்றும்
அறையாத பொறுமை தன்னின நோ்மை

பற்றி எரிந்தது நெஞ்சிலே
கூட்டிக் கழித்தது வெதும்பலிலே
பூப்பூத்த தணல் துரத்தியது வீதியிலே

இரத்த நாளங்கள் கொதிக்கவே
அன்றிட்ட தீயின் அகோர முகம்
இன்றும் பற்றி எரிகிறதே
நய வஞ்சகரில்