நெஞ்சத் தமிழே!
அஞ்சா நெஞ்சம் படைத்து நாமும்
அறிவில் பலமாய் ஓங்கிடுவோம்
கொஞ்சும் தமிழும் கோடி அழகும்
கொள்ளை இன்பம் தருமன்றோ!
நெஞ்சம் இனிக்க நிறைந்த தமிழை
நேசம் ஆக்கிப் படித்திடுவோம்
பஞ்சம் வந்தால் பலதும் மறக்கும்
படித்த தமிழை மறந்திடாதே!
புலமைத் தமிழை புலத்தில் வளர்த்து
பெருமை பெற்றே வாழ்ந்திடுக!
நிலமை புரிந்து நின்றே காத்து
நிதமும் பாக்கள் புனைந்திடுக!
கலகம் அகற்றி கன்னித் தமிழை
கற்று கொடுக்க முனைந்திடுக
நிலங்கள் சென்று தாயை வணங்கி
நிதமும் தமிழைப் பாடிடுக!
நகுலா சிவநாதன்1675