வியாழன் கவி. 186.
மறக்க முடியுமா நம் தேசத்தை
தீவு நம் தீயில் பொசுங்கியதே. தீவு தீயால் எரிகிறது
தீயவர் செய்த நாமெல்லாம்
தீயானதே அடிவயிறும் எரிகிறது.
கார் மேகம் கலையமுன்
போர் மேகம் வந்து 13 ஆண்டும்
வந்ததே மறப்போமா நாம்.
துள்ளி குதித்து பள்ளி சென்றதை மறப்பதா?
நிலாச் சோறு உண்டதை மறப்பதா?
அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்கியதை மறப்பதா
மாமரத்தில் ஊஞ்சலில்
ஆடியதும் ,
கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த நாம் இப்போ தனித்தனியே இருப்பதை மறப்பதா?
செங்குருதி தோய்ந்த மண்ணில்
உறவுகளைத் தொலைத்து பரிதவிக்கும் வயோதிபதாய் தந்தை கண்களில் சென்னிற நீர் வடிகிறது தெரிகிறதா புரிகிறதா?
இறுதி நாளில் பிள்ளைகள் வந்து கொள்ளி போடுவார்களா
வாசல் விழிபாத்து மறைந்தவர்கள் எத்தனை.
பேர் ஊரில்.
வீதியும் ,வீட்டு முற்றம் பல பல்கலை கூறும் இப்போ.
எனினும் வேண்டாம் இன் அழிப்பு
இனைந்தே நாம் நியாயத்தை வென்று சாதனை செய்வோம்
தாராசின் மூடிய கறுப்பு போர்வையை விலக்கிடுவோம்.
அதிபர் வாணி நகுலா,. சிவதஸ்சினி வாழ்த்துக்கள்
நன்றி.