சிங்களம் மட்டும் சட்டம்-ஈழ
தேச மொழியான ஆரம்ப கட்டம்
எங்கள் தலைவர்கல் எதிர்த்து
இருந்தனர் நோன்பு இதே கடல் புறத்து
வெம்பிய இன வெறி கூட்டம்
வெகுட்டு புரிந்தது கொலை வெறி தாக்கம்
சிந்திய ரத்தத்தினோடு
சென்றனர் தலைவர்கள் பாராளுமன்றம்
அன்றய பிரதமர் பண்டா
அகங்கார கேலி புரிந்தர்ர்
என்பார்.
ஆண்டாண்டு தொடர்ந்தது ஆட்டம்
அகில இலங்கையும் இனவெறி தாக்கம்
தார் பீப்பா தனலுக்குள் தாக்கி
தள்ளினர் தமிழரை கொலைவெறி
ஆட்கள்
நாடெங்கும் வீடுகள் கடைகள்
நம் தமிழ் உறவோர் சொத்துக்கள்
உயிர்கள்
தீயிலே எரிந்தன ஆளும்
தேசம் ஒன்றில்லாத தமிழின தாகம்
வீறு கொண்டெழுந்தனர் இளைஞர்
விடுதலைக்காய் உயிர் பலி தந்த புலிகள்.
ஆண்ட தமிழரின் நாடு
அயலவர் கையிலே அகப்பட்ட
கேடு
மீண்டது என்றெண்ணி மகிழ்ந்தோம்
மேகம் தரை கடல் படை பலம்
அமைத்தோம்
தேகம் நடுங்கினர் அயலார்
தினம் தினம் ஆயிரம் செத்தனர் புலியால்..
அந்நிய நாடுகள் உதவ
அநீதிய யுத்தத்தில் பல நாடும் இணைய
அந்திமம் கண்டதெம் ஆட்சி
ஆயிரம் லட்சமாய் உயிர்பலி
வீட்சி
எங்கணும் தீயில் எம் தேசம்
இறைவனின் தீர்ப்பு
இவர் கொண்ட தோசம்
அன்றன்று அறுத்தது ஆட்சி
ஆண்டவன் அறுத்து காட்டுறான்
காட்சி
நின்று கொல்லுது தெய்வம்
நீசர்கள் இனமே மோதுது திடலில்
வெந்து எரியும் தென் இலங்கை
வீரத்தமிழ் மறவர் ஆவிகள் மகிமை