சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.05.2022
கவிதை இலக்கம்-174
பயமதில் உலக மக்கள்
———————————–
நம் நாட்டில் தொலைந்தது மனித நேயம்
இன்று கதை முதல் காவியம் சொல்லுமளவிற்கு
அரசியலின் ஆட்சியில் குழப்பங்கள்
மும்மத மக்களின் வெடிக்கும் போராட்டம்
பதட்ட நிலை மனித வாழ்வு சிதைந்தது
பசி பட்டினி மக்களை பஞ்சமாக்கியது
அயல் நாடுகளுக்கு விற்க வேண்டி நிலையானது
நீதி ஒதுங்கிறது நிலையாய் எதுவுமில்லை
கொரோனோ மன வேதனையின் விரக்தியானது
சற்று தணிந்து மீண்டும் ஒரு புதிய அங்கலாய்ப்பானது
உக்ரைன் ரஸ்சியப் போர் அணு குண்டு சிக்கலானது
உணவுத் தட்டுப்பாடு விலையேற்றம் போர்ப் பயமானது
உலகே மனித வாழ்வுக்கு அச்சுறுத்தல் காலமானது
மனித குலத்தின் பயமான காலமாக பயணிக்கிறது
இந் நிலையில் இறைவனை நோக்கிய வாழ்வாக மாற்றுவோம்