வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு —173
தலைப்பு — தொழிலாளி
காற்றையும் மழையையும் கோடை வெயிலையும்
வேற்றுமை காட்டாது வயலில் வரவேற்று
நாற்று நட்டு நற்பயிர் வளர்த்திட
சேற்றில் சோர்வின்றி செயலாற்றுவன் தொழிலாளி.
சேற்றில் நின்று ஆற்றிடும் பணியால்
சோற்றை நாம் சுவைத்து உண்பதற்கு
ஊற்றாய் உதவிடும் உயர்தொழிலாளி விவசாயி
ஏற்றமுற எல்லோரும் உதவுவோம் இணைந்து.
கல்லுக்குள் உள்ளே கடவுளுருவைக் காட்டிட
கல்லைப் பொளிந்து காட்டுகிறான் தொழிலாளி
உள்ளத்துள் உள்ளே உறைகின்ற உலகநாதனை
உள்ளபடி கண்டிடலாம் உயர்வான வழிபாட்டால்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(03/05/2022)