வேண்டும் வலிமை
தடைகள் தாண்டி
எழுச்சிபெற
புதுமைகள் படைத்து
நிவர்த்தி பெற
வேண்டும் வலிமை
அழுகை அடிமை ௨டைத்தெறிந்து
அங்கீகாரம் சமனிடையாய்
பலவீனம் பழி எடுத்தெறிந்து
மங்கையர் மகிமை ஏற்றிவைக்க
வேண்டும் வலிமை
வேரூன்றிய வேதனைகள்
வெட்டி வீழ்த்தனும் சாதனைகள்
இழையோடிய இழப்புக்கள்
புறம்தள்ளிய சிறப்புக்கள்
எழவேண்டும் வலிமை
பேரன்பால் மனக்கதவு
தட்டித்திறக்கனும் ஓர்குடையில்
இனம் மொழி மதம்
அரசியல் கோட்பாடுகள்
இணையந்து வாழ
வேண்டும் மனவலிமை
நன்றி