வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

மகிழ்விலே நெருடல்.

மயக்கும் மாலைப் பொழுது
வியக்கும் காட்சி அமைப்பு.
ஆதவன் அந்திவானில் அமிழ,
உழவன் வயலிலிருந்து வீடுவர.

இடர்கள் பலவரினும்
எதிர்த்தே முன்னின்று.
தடைகள் நீக்கி,
தானியம் விளைவித்து,
தன்னிறைவு காணும்
விவசாயி இவன் மகிழ்வோ அலாதி.

நாம் படித்துவிட்டோம் பெருமை.
வேலை பார்ப்பதில் கைநிறையப் பணம்.
வீடு வளவு கார் இத்தியாதி
இதில் வாழுகின்றொம் மகிழ்வுடன்.

இங்கு இருவகை பார்த்தோம்
எதில் உண்மையான மகிழ்வு.
விவசாயிடம் உள்ளதுதான்
உண்மையான மகிழ்வு.

பணம் உள்ளோர் படித்தவர்
உணவு இல்லையெனில் உயிர்வாழுமா
உங்களுக்கு மகிழ்ச்சி எந்தளவோ
சிந்தித்தால் விலகிடுமா.

அடுத்தவர் கஷ்டத்தில் அணுவளவும் அக்கறையில்லை
நான் என் குடும்பம் என வாழும் சமுதாயம்.
தன்னலம் விட்டு பொது நலம் பார்த்தால்
புவி மாந்தர் உவகை அடைவார்
புவி மாந்தர் உவகை அடைவார்.
அகமகிழ்வும் கிட்டும்.
மகிழ்விலே நெருடல் விலகும்.

கெங்கா ஸ்டான்லி