கவிஇலக்கம்- 170 /
விருப்பு தலைப்பு ! 20.04.2022
“ எதிர்காலம் இருளானதோ “
நான்சென்று வாழ்வேன்
நலமாக என்றேன்
ஏன்விடிய இல்லை எதிர்காலம்
இருளானதோ /
நாளை மலரும் நமது நாடென
வேளையின் வேதனை விடியாது போனதோ /
மாண்ட உயிருக்கு மரியாதை செய்திட
ஆண்ட தமிழனாய் அனுகிட அருகில்லை /
தாய்மண் வாசம் தமிழரின் பாசம்
வாய்மொழி சிந்துதமிழ் வரலாறு பேசும் /
தாய்வீட்டு மகழ்வீந்த தாய்மண்ணே
வணக்கம்
சேய்வந்து வாழ்ந்திட சேர்ந்திடும்
இனக்கம் /
என்ஈழ தேசமோ என்றும்என் நேசமே
அன்றலர் மலராய் அன்னைமடி மலர்வேனோ /
புதிரான சதிகாரர் போராட்ட விதியாலே
எதிர்காலம் இருளாகி ஏற்றத்தை இழந்ததோ /
நன்றி 🙏