சந்தம் சிந்தும் கவிதை

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 171
எதிர்ப்பு அலை

மாண்டதனால் வீழ்ந்து கிடக்கின்றது இலங்கை
மீண்டு எழுந்திட கை கொடுக்க யாருமின்றி
கொத்துக் கொத்தாய் எம் இனமக்களை
கொத்துக் குண்டுகளால்
கொன்று குவித்த பாவத்தின் சாபத்தால்

விதைத்த வினையின் அறுவடைக்காலம்
அன்று அறுத்த அரசனுக்கு
இன்று அறுக்கின்றான் இறைவன்
எதிர்ப்பு அலைக்குள் ஆட்டம் காணும்
அசுர ஆட்சிக்கப்பல் கவிழும் நிலையில்

எரிவாயு இன்றி வயிறு பற்றி
எரிகின்ற போது தெரிகின்றது
வாய்க்கரிசியின்றி முள்ளி வாய்காலில்
எம் இனமக்கள் பட்ட துன்ப துயரம்
பத்தும் பறந்து போனதனால்
சித்தம் தெளிந்து போனார்கள்

சங்கு ஊதும் சகுனி நாடுகள்
சுயநல அரசியலை நிறைவேற்ற
மதில் மேல் பூனையாய் பதுங்குகின்றன
மக்களின் எழுச்சி வீறுகொண்டு செல்கின்றது
இராவணன் ஆண்ட பூமிக்கு சாப விமோசனம் கிடைக்குமா

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
14-04-2022