சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 170

தலைப்பு — தோல்வியும் வெற்றியும்

கல்வியில் உயர்நிலை காணாமையால் கவலை
இல்லத்தில் வசதிகள் இல்லாமையால் கவலை
செல்வம் சேராமையை சிந்தித்துக் கவலை
தள்ளிடும் தோல்விகளால் துவண்டிட வேண்டாம்.

பட்டம் பெற்றதால் பற்றிடும் பெருமை
கிட்டிய பதவியால் காட்டிடும் செருக்கு
சட்டப்படி கட்டுக்கள் சேர்வதால் கிறுக்கு
வட்டமிடும் வெற்றிகளால் வெறிகொள்ள வேண்டாம்.

தோல்வியைக் கண்டு துவண்டிட வேண்டாம்
சூழ்ந்திடும் வெற்றியால் செருக்குற வேண்டாம்
தோல்வியும் வெற்றியும் தொடர்சூழல் சக்கரங்கள்
ஆழ்ந்து சிந்தித்து அமைதியாய் வாழ்க.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(10/04/2022)

கட்டுக்கள்=பணக்கட்டுக்கள்