நினைவுகளால் வதைக்கிறாய்
கனவுகளால் வருடுகிறாய்
இருவேறு உலகத்தினுள்
இதயத்தைப் பிழிகின்றாய்
பார்வையால் கொன்றிட்டு
புன்னகையால் உயிர்ப்பிக்கிறாய்
ஞாபகங்களால் சூடேற்றி
நாணத்தினால் குளிரூட்டுகிறாய்
பனியாக உறையவைத்து
பகலவனாய் உருக்குகிறாய்
நெருங்கையிலே தென்றலாகி
நகர்கையிலே புயலாகிறாய்
காதலெனும் மூன்றேழுத்தாய்
காளயின் இதயத்திலேதுளிர்த்து
மோகமெனும் மூன்றெழுத்தால்
மோதியேனோ கொல்கிறாயே !
புதைத்திட்ட விதையான
பாவையுந்தன் பார்வையது
விருட்சமென விரிந்தின்று
விழுங்கிட்டதென் நெஞ்சை