கவிதை 170
அதனிலும் அரிது
அரிது அரிது அதனிலும் அரிது
மனிதனாய் பிறப்பதே அரிது
என்றார் ஔவைப்பாட்டி
சொல்வது எளிது என்றேன் நானும்
சுத்தம் சுகம் தரும் என்பார்
சேரியில் வாழும் பிள்ளை
நலத்துடன் வாழ்ந்திடவே
உணவாக்கினோம் மருந்தை நாமே
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்றார் எங்கள் முன்னோர் எம்
நடைமுறையால் குறைத்திடலாம்
இல்லாதொழிக்க முடியாதே
நன்றி
வணக்கம்