வியாழன் கவிதை 07-04-2022
ஆக்கம் – 37
அதனிலும் அரிது
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது
பரிபூரணநலமுடன் பிறந்திடல் அரிது
நோயின்றி நலமுடன் வாழ்ந்திடல் அரிது
அதனிலும் அரிது மனிதனாய் வாழ்வது அரிது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்
சுவர் இருந்தால்தான் சித்திரமும் வரையலாம்
சுத்தம் சுகம் தருமென சுவர்களிலும் எழுதலாம்-ஆதலால்
சுகம் தரும் ஆதாரம் சுகாதாரம் பேணுவோம்
உலகம் போற்றும் உன்னதமான சுகாதாரதினம்
மானிடம் போற்றும் மகத்தான மக்கள் சேவை
கண்ணியமாய் கடமை ஆற்றும் மனிதநேயக் காவலர்கள்
உன்னதம் நிறைந்தவர்களை என்றும் போற்றுவோம்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்