சந்த கவி இல__61
“பட்டினி”
பஞ்சம் பட்டினி
பாரில் பரிதாவநிலை
பக்குவமாய் சொன்னாலும்
பாதகர் கேட்கமாட்டினம்!
உளைப்பு இல்லை
பிளைப்பு இல்லை
ஊதியம் வரவில்லை
உயர்ந்ததே விலைவாசி!
மாற்று வழி ஏது
மாற்றத்தை காண்பதே
மரவள்ளி தடிதனை
மன்றாத்துடன் நாட்டி
பசிதனை போக்குவதே!
போர் சூழலில்
போத்து படுக்கவில்லை
போத்தல் விளக்கில் படித்தோம்
போணியில் சீனி தொட்டு
தேனீர் பருகினோம்!
பொருளாதார தடைதனை
அரசு போட்டது
எம் தலைவன்
தடைதனை உடைத்தான்!!
உயிர் கொடுத்தான்!!
விழிப்புணர்வு ஊட்டி
விதம் விதமாய்
விவசாயத்தை
ஊக்குவித்து
விதை செடிகொடிகளை நாட்டி
பஞ்சத்தை போக்கி
பட்டினியை தவிர்க்க வழி
சமைத்தார்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்