துளி நீர்
வானம் தெளிக்கும்
பூமி சிலுக்கும்
௨யிரினம் சிலுப்பும்
துளி நீர் ஒவ்வொன்றாய்
வடியும்
ஓலைக்கூரை தாங்கி மடியும்
ஓடும்நதி வாங்கி விழுங்கும்
கொடியும் மல௫ம் கூதலாகும்
மரமும் கனியும் வியர்வையாகும்
௨யிர்கள் காக்கும் துளிநீர்
வறண்டு சு௫ண்ட நிலம்
வரம் பெறும் வளம்
திரவத் தங்கம் ௨ன்
சிறப்பு நாமம்
இயற்கையை அழித்தோம்
நிலத்தடிநீரைக் குறைத்தோம்
ஓர்துளி நீரும் சிந்த மறுக்குதே
ஏரியும் குளமும் கடலும் ஆறும்
பஞ்சத்தில் வாட கீறலாய் நிலம்
கிழிந்து கிடக்குதே துளி நீர்யின்றி
நன்றி