வியாழன் கவிதை

திரேஸ் மரியதாஸ் துளி நீர்

“துளி நீர்” திரேஸ் மரியதாஸ்
பாமுக அதிபர் நடாமோகனுக்கும் கவிதைத் தொகுப்பாளர்களுக்கும் அன்புறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கமும் வாழ்த்துகளும்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டும்
“துளி நீர் “
துளிநீரை சிந்தாமலுன்னைச் சிறைவைத்துக் காப்பேன் கடலே என்னை மட்டும்
உன்னோடு இணைத்துவிடு பிணைப்பாய்

உன்னை ஆவியாக்கி எவரெவருக்கு எப்ப மழைதேவையோ அவரவருக்கு அப்பவளித்து
அரிய விவசாயத்தை பெரியதாக்கிப் பூரிப்படையவைப்பேன் பூக்கவைத்துப்
புத்தெழுச்சியாய்

சொட்டுக் கண்ணீரைக்கூடச் சிந்தாமல்
எட்டுத்திக்குமுள்ள வாட்டுங்கவலைகளை
புட்டுப்புட்டெடுத்து மட்டில்லா மகிழ்வை
மாந்தருக்களிப்பேன் நான் வாழுங்
கடலரசியானால்

கடலிலுள்ள நீரைத் தரம்பிரித்து
நன்னீராய் நம்மேழைகளுக்களித்து
உற்றதாய் உகந்த தண்ணீராய்
தாகமகற்றும் அற்புத அட்சயபாத்திரமாய்

நடமாடுந்தெய்வங்களே
குடங்களைச் சுமக்கும் பெண்கள்
உங்களின் விழிநீரை நானேந்தித்
தரையை நனைக்காமல்
பெருமழையாவேன் பருக

ஆக்கம்- திரேஸ் மரியதாஸ்
இலண்டன்