பணி…
பணிவே பண்பின் மூலதனம்
பணிதல் அன்பின் அடையாளம்
மொழிக்கே உள்ள முதலீடு
பெரியோர் பணிதல் பெரும்பேறு
உளமாய் பணிதல் உளப்பேறு
வரமாய் பலபணி வாய்ப்பாகும்
பணி செய்து வாழ்தல் தொண்டாகும்
பலரின் வாழ்வே தொடராகும்
அரும்பணியாற்றும் அகல்விளக்காய்
அர்ப்பணப் பொழுதின் ஒளிவிளக்காய்
எத்தனை பணிகள் எமக்காக
என்றும் வழி தரும் விளக்காக
சுற்றும் புவிக்குள் சுடரிடுமே
சுழலும் வாழ்வாய் புடமிடுமே
ஒய்வே அற்ற கடிகாரம்
உலகை உணர்த்தும் உபகாரம். நன்றி மிக்க நன்றி