சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு – பணி

பணிச்சுமை என்னை பாடாய் படுத்திட துணிந்த நானும் துவண்டு விழுந்திட அல்லும் பகலும்
அயரா யுத்தமே நல்வினை புரிந்திட
நாள்கிழமை இல்லையே

அதிகாலை எட்டரை அந்திப்பொழுது ஐந்தரை
விதியென உழைத்துவிட்டு
வீடுவர வருத்தமே

ஏழுவரை மாலைவகுப்பு
என்சொல்வேன் என்விதியை அழுவதற்கும் நேரமில்லை அலைபாயுதே என்மனமே

இல்லத்தில்
தொடர்பணி
இரவு ஒன்றே இடைவெளி

செல்லமாய் குழந்தையுடன் செலவிடவும் நேரமில்லை

பத்தரைமணி ஓய்வில் பக்கத்தில் எழுதுகோல் நித்திரையில் தலைகவிழ்ந்து நினைவிழந்து துயில் கொள்வேன்

நிற்பதற்கும் நேரமில்லை
நிதானித்து எழுதுவதற்கும் ஓய்வுஇல்லை

சொற்பநேரம் உறவாடி
சொந்தம் கொண்டு
சந்தம் சிந்த
ஆவல் கொண்டேன்

🙏🏻நன்றி வணக்கம்🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻