கவி 598
பெண்ணில்லா மண்ணா
இறைவனை போன்றதொரு உண்மை
குறையில்லா நிறைவதன் தன்மை
பூத்திடும் பூக்களின் மென்மை
காத்திடும் உன்னதம் பெண்மை
பிறந்திட்ட பிறப்பதில் பரிபூரணம்
சிறந்தநல் வாழ்க்கைக்கு காரணம்
அன்பிற்கும் பரிவிற்கும் ஓரினம்
பெண்ணே உயர்வான உயிரினம்
பொன்னென்றும் பூவென்றும் அழைப்பார்
கண்ணென்றும் கவிக்குள்ளே நுழைப்பார்
எண்ணில்லா கவிஞரும் பிழைப்பார்
எண்ணங்கள் மோதியே களைப்பார்
படைப்புக்களில் பெண் விசித்திரம்
நடமாடும் படிக்கவேண்டிய சரித்திரம்
உயிர்களெல்லாம் அவளிடம் தஞ்சம்
உயர்வானதென்றும் பதுமையர் நெஞ்சம்
ஜெயம்
16-03-2022