சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

15.03.2022

சந்தம் சிந்தும் வாரம் -166
தலைப்பு !

“பிறந்தநாள் வாழ்த்துக்கவி”
(இளம் வள்ளுவன் கவித் ) 17.03.2022

தலைமகனே! என்
தவமகனே!/
என்றனை உயர்த்த வந்துதித்த திருமகனே!/
குலம் தழைக்க குலவிளக்கானாய் செல்லமே/
வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்தவனே!/
உனைவாழ்த்த அன்னையிவள் வார்த்தையின்றி அணைக்கின்றேன்/

அகவை ஒன்பதில் அகமகிழ்வாய் வாழ்த்துகிறோம்/

முத்தமிழால் நீயும் முத்திரை பதித்திடுவாய்/
வித்தைகள் பலகற்று விருட்சமாய் உயர்ந்திடுவாய்/
வள்ளுவப் பெருந்தகையின் கொள்ளும் பேரன்நீயென/
ஊருலகம் உன்னை வாழ்த்திட
வேண்டுமய்யா/

உள்ளம் கவர்ந்த வனாய் உத்தமனாய் வாழ்ந்திடுவாய்!/

பாமுகச் சிறுவரும் பண்புடை பெரியோரும்/
அன்புடன் அரவணைக்கும் மாமாக்கள் மாமிகள்/
அத்தனை உறவுகளும் ஆரத் தழுவியுனை
வாழ்த்தியே நிற்கின்றனர்//

சாதனை படைத்துமே கவித்துவன் நீயும்/
வித்தகனாய் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க செல்லம் வளமோடு/…

நனிநன்றிகள் பாவை அண்ணா🙏