சந்தம் சிந்தும்
ஆக்கம் 166
வேலைக்காரி
எதிர் வீட்டு படியில்
எட்டு வயது
மகளின் மேல்
பரிவு காட்டும் தாய்!
என்னை அழைத்துப் போ
என தேம்பும் அவளுக்கு
அழுகையை பதிலாக
தந்தாள் !…
இவள் கல்வி
உங்கள் பொறுப்பு
இல்லம் விட்டு
வெக நடை பயில !!
அம்மா என்னை விட்டு
போகாத !!…
தேம்பும் அந்த சிறுமையின
கைகளை இறுக்கமாக
பிடித்தாள் எஜமானி
பல கண்கள்
பதிவு செய்தன!
க. குமரன்
யேரமனி