ஒற்றைக்காலில் கொக்கு
உறுமீன் வருகைக்கு காப்பு
இயற்கை வளத்தின் இணைப்பு
ஈடிணையற்ற செழிப்பு
நாடிடை மிளிரும் போரில்
நட்பென உரமிடல் மீட்பு
மார்ச் எட்டின் முனைப்பு
மகளிர் தினத்தின் இருப்பு
போற்றும் தினத்தின் மதிப்பு
போக்கும் திமிரின் கலைப்பு
ஆக்கும் வளத்தின் உழைப்பு
அவனி மிளிரும் சிறப்பு
திமிரில் இருவகை உராய்வு
தேவையே சிலகணம் தீர்வு.
நன்றி
சந்தம் சிந்தும் கவிக்களத்தின்
வாரவாரச்சிறப்பிற்குப் பாராட்டுக்கள். நனிமிகு நன்றிகள்.