விடியலின் உன்னதம் ( 504)
பகலவனின் ஒளிதானும்
பாருக்கே வெளிச்சம்
பார்ப்போரின் கண்ணுக்கு
பசுமையின் உச்சம்
வாழ்க்கை என்னும் சக்கரம்
வாழ்வதாலே வந்திடும் சிறப்பு
வானத்து தாரகை போல்
வாகையாய் விடிந்துவிடு
போரென்னும் கொடுமை
முரண்படும் அதிகாரம்
உணவின்றி உறக்கமின்றி
பலியாகும் உயிர்தனை
விலையில்லா விடியலின்
வேள்விதனை முறியடிக்கட்டும்