வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-03.03.2022
கவி இலக்கம்-1471
விடியலின் உன்னதம்
————————————
சிறைப் பட்டிருந்த செங்கதிரோன்
வெள்ளிக் கதிர்களை எழுப்பி
உலகிற்கு உன்னதமாக ஒளி தந்து
உலாவிட ஓடி வருகின்றான்
பூக்கள் மலர்ந்து வரவேற்கின்றன
வாசம் கொண்டு பெண்களை அழைக்கின்றன
மலர் கொய்து கடவுளுக்கும் கொண்டைக்கும்
அணிவித்து மகிழ்கின்றனர்
வண்டானது ரீங்கார ஓசையுடன்
குரலெழுப்பி தேன் உண்டு மயங்குகின்றன
சேவல் சிறகடித்து கூவ காகங்கள் கரைகின்றன
கோயில் மணி தாறு மாறாக ஒலி எழுப்ப
தெருவோர வாகனங்கள் சத்தம் கிளப்பிட
அம்மா அடுக்களையில் ஆரவாரத்துடன்
தன் காரியங்களை அவசரமாக செய்து முடித்து
கணவனை வழியனுப்பி வைத்து விட்டு
பிள்ளைகளின் கவனிப்பில் உன்னதமடைகிறாள்
விடியலின் மடியிலே அடி வைத்து வைக்கவே
கொரோனா தொற்றும் தொலைந்து ஒளிந்திடவே
இகபர நன்மை பெற்ற வாழ உன்னதம் வேண்டுமே
உக்ரைன் றஸ்சிய போரின் குழப்பங்கள்
இனமத பேதமின்றி இணையற்ற இறைவன் துணையால்
உறவுகள் ஒன்று சேர்ந்து பற்று கொண்டு வாழ
உன்னத விடியலாய் புதுப்பொலிவுடன் புலரவே
புது வசந்தம் வீசி அலங்கரிக்க
நல் வரவாய் வந்து உன்னத விடியலை தந்திடுவாய்