சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

பள்ளிக் காலம். பெற்றவளின் மடி அணைப்பில் தொற்றி நின்ற காலம்
பிஞ்சாய்நான் ஆரம்ப பள்ளி சென்ற நேரம்
பற்றி நின்று அவள் கையை பல சொல்லி அழுது
பாலகனாய் வேண்டியதை பெற்றிருந்த பொழுது
உற்ற துயர் ஏதும் இல்லை பற்றுமழை பாசம்
உற்றார் தம் அன்புறவும் முத்த மழை வீசும்
மற்றெந்த ஆசைகளும்
மலராத காலம்
மனநிறைவாய் ஆரம்ப பள்ளி சென்ற காலம்
* பள்ளியிலே நான் பயின்ற சிறுவயது நாட்கள்
பல வெற்றி கைப்பற்றி
பெற்றிருந்த சீர்கள்
துள்ளல்அடி ,றைற்ரோ ஓ றோக் ,டாக் டிக் டோக் ,மாபிள்,
கள்ளன் பொலீஸ் விளையாட்டில் களித்திருப்போம் லீவில்
பள்ளத்து வெள்ளத்தை
துள்ளிப்போய் எத்தி
ப வைக்கும் விளையாட்டு ஒழுங்கைகளை சுற்றி
கள்ளத் தீன் ஆசையிலே கல் எறியில் மாங்காய்
காலமது மாணவனாய்
பள்ளி சென்ற பாங்கும்
*நாடகங்கள்,சாரணீயம்,பேச்சு,கவிதை என்று
நகர்ந்திருந்த உயர் பள்ளி நாட்கள் அவை அன்று
ஊடகங்கள் சில மூலம்
ஒளிவீசும் திறமை
உள்ளடையும் பாராட்டால் மனம் மகிழும் பெருமை
பாடமுடன் மாணவர்கள் சங்கத்து தலைமை
பதவிகளில் போட்டியிட்டு வென்று வந்த வழமை
கூடி நின்ற ஆனந்த பருவ நாட்கு ஈடு
கொண்டிடலாம் பள்ளி அன்றி வேறு எதிலே கூறு?