சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

**** சிந்தை நிறைக்கும் சிவராத்திரி***

எந்தை ஈசன் எம்பெருமானை
சிந்தை நிறைத்து சிவராத்திரியில்
வந்தனை செய்ய வரம்பல பெருகும்
முந்தை வினையும் முழுதும் அறுமே

சிவனுக்கே உகந்த திருநாள் தேடி
தவமதாய் இருந்து தலங்கள் நாட
அவனருள் பெருகும் அகந்தை அழியும்
பவமதும் நீங்கும் பரமுத்தி கிட்டும்

ஒருநாள் இரவு முழுதும் விழித்து
பெருமான் புகழின் பெருமை சொல்லி
அருவுருவான அருட்பெரும் ஜோதியின்
திருவருள் காணும் தினம் இதுவன்றோ .