சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 164

தலைப்பு — இதற்கு வெறுப்படையார்

அற்புதம் ஆற்றல் ஆர்வம் இணைந்திட
கற்றல் முற்றிக் கனிந்திடும் பட்டமாய்
சுற்றாடலை சாதகமாய் சேர்த்துச் செயற்படாது
மற்றவரைப் பார்த்து மனங்கொதிப்பவர் இவர்.

ஆடம்பர வாழ்வும் இணைந்த வசதிகளும்
பாடமாய் பதிந்திடும் பாடுபடும் முயற்சிக்கு
நாடாது ஊக்கமுடன் நடக்க முயலாது
கூடியதைப் பார்த்து கடுகடுப்பார் இவர்.

முடிவில் மரணம் முன்னறிவித்தலின்றி ஓடிவரும்
வடிவங்கல் பலவற்றால் வந்துயிர் பறித்திடும்
முடிவிதனைப் பார்த்து மெளனியாய் இவரிருப்பார்
கடினப்படார் வெறுப்படையார் மனங்கொதியார் இதற்கு.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
01/03/2022