உழைப்பே உயிர்
பெய்யும் மழையின் நீரே
பெருமை கொள்ளும் நல்வரமே!
செய்யும் தறியின் நெசவும்
சிறப்பாய் மிளிரும் நல்லாடை
நெய்யும் தினையும் கலந்தால்
நுட்பம் ஆகும் மாவிளக்கு
உய்யும் வாழ்வும் பெருமை
உணர்வாய் உலகில் உழைப்பாலே!
உழைப்பே என்றும் உயிராய்
உணவும் தருமே வனப்பாக
உழவே உயிரின் முதலாய்
உழவன் வாழ்வின் உறுதுணையாய்
தழைக்கும் பயிரின் செழிப்பு
தளிர்த்து எழுமே மிகுவனப்பாய்
களைப்பே களையும் வாழ்வு
கன்னித் தமிழாய் மின்னிடுமே
பயிரின் வளர்ச்சி மிகையாய்
பார்க்கும் கண்கள் பூரிப்பாக
உயிரை வளர்க்கும் உணவாய்
உளத்தை காக்கும் மிகுசக்தி
தயிரும் பாலும் கிடைக்கும்
தடவி கொடுக்கும் நற்பசுவால்
வயிறும் பசியை நீக்கும்
வண்ண வாழ்வின் உயிர்உழைப்பு
நகுலா சிவநாதன்1652