சந்தம் சிந்தும் சந்திப்பு!
சாந்தி!
மனிதம் தேடும் புனிதம்
மலராய். வீசும் சுகந்தம்
கனிந்து தருவதோ இன்பம்
கைதனில் கிடைத்திடப் பஞ்சம்
தணியா மனத்தின் ஏக்கம்
தரணி வாழ்வின் உச்சம்
வாழும் காலம் தன்னை
வாஞ்சை செய்யும் பக்கம்
பாழும் மனத்தின் போக்கால்
பதியம் காணாத் தேட்டம்
நாளும் பொழுதும் அலைந்தும்
நலிவு கண்டதே மிச்சம்
தனத்தில் மேலாம் சொர்க்கம்
தக்க வைத்தால் ஏற்றம்
உனக்குள் எனக்குள் இருந்தும்
உறவாய்க் கொள்ளத் தர்க்கம்
வனப்பாம் நிறைவு ஒன்றே
வசியம் ஆக்கி வைக்கும்!
கீத்தா பரமானந்தன்21-02-2021