கவிதை நேரம்-17.02.2022
கவி இலக்கம்-1461
உருமாறும் புதிய கோலங்கள்
————————————-
உலகினை புரிந்ததுமே உண்மைகள் அறிந்திட
பலமுனை எங்கணும் உருமாறும் கோலங்கள்
மகத்தான மனிதனின் மாண்பான உணர்வுகளை
மதித்து நடக்காமல் மிதிக்கும்போது
அங்கு மனிதம் மடிந்து உருமாறுகிறது
மனிதர்களை கொத்தடிமை ஆக்கிய கொரோனோ
பல கோலங்களாக உருமாற்றும் பெற்று
புதுப் புது பெயர்களாக விலாசமடித்து
ஆட்சியாய் மகிழ்ச்சியாய் குதூகலிக்கின்றன
மனிதர்களும் குலை நடுங்க செய்கின்றது
தேன் மொழியாம் தமிழ்மொழியின் வளர்ச்சியை
இளையோர் பகிர்ந்து பலன் பெற்று வளர
தமிழ்மொழி நாள் பொன்மாலைப் பொழுதுகளும்
வாசிப்பு உரையரும்பு என உருமாற்றம் பெறுகின்றனவே
வளர்ச்சியில் உருமாறி புதிய பயன்கள் அடைகின்றனரே
காலநிலை மாற்றம் பெற்று புதிய கோலங்களாக
பனிப்பாறை உருகலும் அதி வெட்ப கொடுமையும்
மழை வெள்ள கொடுமைகள் தீ பிளம்புகள் வாய் பிளப்பும்
கோளங்கள் பல மாற்றங்கள் பெற்றும் அழிவும்
மண்ணில் மனிதத்துவம் உருமாற்றம் பெற வைக்கிறதே